பிரதான செய்திகள்


கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (26) மாலை 6.00 மணியளவில், மாளிகாவத்தை ஜும்மா பள்ளி சந்தி, துணி சலவை கடைக்கு அருகிலுள்ள வீதியில் வைத்து குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இத்துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு 10, மாளிகாவத்தை பிளேஸில் வசிக்கும் 31 வயதான எம்.எம். சித்தி ரினோசா என்பவர் மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த பாதையால் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணின் மீது துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Thanks Al-Masoorah


சவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்.

கடந்த நான்கு தசாப்தங்களாக தீவிரப் போக்கில் தமது நாடு சென்று விட்டதாகவும் இனி வரும் காலங்களில் மிதவாத கொள்கையைப் பின்பற்றவுள்ளதாகவும் கடந்த வருடம் அவர் தெரிவித்திருந்த நிலையில், சவுதியில் பெண்களுக்கும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் உட்பட விளையாட்டு போட்டிகளை பார்வையிடல் மற்றும் பல்வேறு விடயங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள முஹம்மத் பின் சல்மான், யாரும் இவ்வாறான திணிப்பைக் கையாள வேண்டிய அவசியமில்லையெனவும் கண்ணியமான ஆடைகளை அணிவது போதுமானது எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஞாயிறன்று அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், கண்ணியமான ஆடைகளை அணியும்படியே ஷரியா சட்டம் வலியுறுத்துவதாகவும் அது கருப்பு நிற அபாயாவாக இருக்க  வேண்டும் என எங்கும் கூறப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009 யுத்த நிறைவின் பின் தொடர் இனவாத இலக்காக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ற்போது ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம் சமூகம் மது கண்டனத்தை வெளியிட ஒன்று கூடி ஒழுக்கமான முறையில் (19/03/2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், ஜேர்மனிபிரான்ஸ்இத்தாலிஉட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு இலங்கை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதோடு தமது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் போது முஸ்லிம்களை 'நிம்மதியாக' வாழவிடுமாறும் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for அமித் வீரசிங்க
கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை. கடைகள், பள்ளிவாயல் என்பவற்றை தீ வைக்குமாறு எனது கணவர் அறிவிக்கவும் இல்லை. பொலிஸார் தான் தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தார்.
தற்பொழுது அனைவரும் எனது கணவர் மீது பழியைப் போட்டுவிட்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.


இரு குண்டுத் தாக்குதல்கள்

இன்று அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்!

ஹோட்டல் முற்றாக எரிந்து நாசம்.

நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் 1  மணியளவில் தர்கா டவுன் அதிகாரிகொட
பகுதியில் பூட்டி கிடந்த வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

தீ அணைக்கப்பட்டுள்ளது. தற்போது STF உடன் பொலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
Image result for question mark.
திகன வன்முறைகளுக்கு காரணம் என அமைச்சர் ராஜித கூறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை நாட்டிற்கு அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னனி சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளின் பின்னனியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக ராஜித சேனாரத்ன கூறியிருந்த நிலையில் அவர்கள் யார் என்பதை நாட்டிற்கு அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னனி சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget