விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

இடம்பெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார்


வினாத்தாள் திருத்தும் பணிகள் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.
அதன்படி இன்று 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முதல்கட்ட வினாத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், முதல்கட்ட வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறும் 57 பாடசாலைகளினது முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-வீரகேசரி

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget