மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வியாபார நிலையத்தில் தீ (05/03/2018)

(கண்டி) மொறகஹமுல்ல பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் (MKM) தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகன பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் குறிப்பிட்டனர்.

தற்போது திகன பிரதேசத்தின் அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பில் முன்னெடுக்கபட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர்கள் குறிப்பிட்டனர்.
சற்றுமுன்னர் பொலிஸ் மா அதிபர் விஷேட அதிரடிப்படை பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இருவரும் கதைத்ததாக கூறிய அவர் தேவையேற்பட்டால் ராணுவத்தை களமிறக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.


அம்பாறையில் இருந்து சென்ற வேன் ஒன்றின் மீது மெதமஹனுவரவில் கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





-அல்மசூறா நியூஸ்

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget