அம்பாந்தோட்டையில் பறக்கும் சீனக்கொடி

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆங்கில புதுவருட பிறப்பான நேற்றைய தினம் சீனாவின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அங்கு இலங்கையின் தேசியக் கொடியும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கொடியும் ஏற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றிற்கு இணையாக சீனக் கொடி பறப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாகம்புர துறைமுகமானது 99 வருட கால குத்தகைக்கு சீனாவின் மேர்சன்ட் போல்ட் ஹோல்டிங் எனும் நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வழங்கப்பட்டது.

குறித்த குத்தகை உடன்படிக்கைக்கு அமைவாக 292.1 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் இலங்கை மத்திய வங்கியில் கடந்த வாரம் வைப்பிலிடப்பட்டது. குத்தகையின் மொத்த வருமானத்தில் 30 வீதமான தொகையே இது.

துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதால் இலங்கையில் சீன ஆதிக்கம் மேலோங்குமென ஏற்கனவே பல தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் தற்போது அங்கு சீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மாகம்புர துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது பணியை நிரந்தரமாக்குமாறும் கோரி துறைமுக பணியாளர்கள் கடந்த 42 நாட்களாக துறைமுகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


நன்றி-தினக்குரல்
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget