கத்தாரில் வருடாந்தம் இடம்பெறும் ஒட்டக ஓட்டப் போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா?

மனிதர்களுக்கு இடம்பெறும் ஓட்டப்போட்டி போன்று ஒட்டகங்களுக்கு இடையில் ஓட்டப் போட்டி நடக்கும் நாடு தான் கத்தார். இந்த ஓட்டப்போட்டி கத்தாரில் பாரம்பரியமாக நடந்து வரும் ஒன்றாகும். இதற்கொன தனியான ஒரு பகுதியையே கத்தார் அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் இந்த ஒட்டகங்களுக்கான ஓட்டப் போட்டிகள் இடம்பெறுவதோடு இதில் பங்கு பற்றி முதல் இடத்தைப் பெறும் ஒட்டகங்களுக்கு மில்லியன் கணக்கு கத்தார் றியால்கள் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2017ம் வருடத்துக்கான போட்டி கடந்த 2017-12-25ம் திகதி இடம்பெற்றது. இதில் அதிதியாக கத்தார் அதிபர் தமீம் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

வருடாவருடம் நடக்கும் இந்த போட்டிக்காக  உரிமையாளர்கள் தங்களது ஒட்டகங்களை சிறந்த முறையில் பழக்கி வருகின்றனர். இந்தப்போட்டியில் ஒட்டகங்கள் சுமார் 8-10 கீலோ மீற்றர்கள் தூரம் வரை ஓட விடப்படுகின்றன.

இந்தப் போட்டிகள் கத்தார் சஹானிய்யாப் பகுதியில் உள்ள ரேசிங் ட்ரக்கில்இடம்பெறுகின்றன. இந்த ட்ரக்கானது 2022 கால்பந்து இடம்பெறவுள்ள மைதானமான அல்-ரய்யான் (Under the Construction)  மைதானத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget