பேஸ்புக் ஊடாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது

வேட்பாளரின் வாகனத்திலும் கட்சி அலுவலகத்திலும் மாத்திரமே சுவரொட்டிகளையும் பதாதைகளையும் பயன்படுத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளரின் வாகனத்தில் அவரது படத்தையும் பதாதைகளையும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலோ வீடுகளின் சுவர்களிளோ ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை பொதுமக்களுக்கு அகற்ற முடியும் என்றும் அது பற்றி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பிரசார பணிகளை மேற்கொள்ள முடியாது. சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். “பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று”  சிலர் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

“இது சட்டவிரோதமானதாகும். வாக்குகள் மூலம் பெண்கள் தெரிவு செய்யப்படாவிட்டாலும் போனஸ் முறையின் மூலம் அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்படும்”இ என்று தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி-Thinakkural
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget