வெளிநாடுகளில் இலங்கைக் கடவுச்சீட்டைப் புதுப்பிப்பவர்களுக்கு கவனத்திற்கு! புதிய சட்டம்!

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச் சீட்டைப் புதிதாக விண்ணப்பித்துப்பெறுபவர்களுக்கான புதிய நடைமுறை ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனடிப்படையில் 2018 ஜனவரி முதல் விநியோகிக்கப்படும் அனைத்து 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான கடவுச்சீட்டு உரிமையாளர்களும் அடுத்த தடவை இலங்கை வந்ததும் தமது விரலடையாளங்களைப் பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குத் திரும்ப முன்னராக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் இதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும் என பெரும்பாலான தூதரகங்களில் தற்போது அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.


இதேவேளை கண்டி, மாத்தறை, வவுனியா, குருநாகல ஆகிய இடங்களில் பிரதேச சபைகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget