பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளர்.
காலி கோட்டைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன் கையில் பையொன்றினை வைத்துக் ஆங்காங்கே காணும் குப்பைகளை அகற்றி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
குறித்த சிறுவனிடம் “நீங்கள் ஏன் இவ்வாறு குப்பைகளை அகற்றுகின்றீர்கள்?” என இலங்கைப் பிரஜை ஒருவர் வினவிய போது குறித்த சிறுவன் “இலங்கை ஒரு அழகான நாடு, அதை அழகாக வைத்திருப்பது எனது கடமை” எனக் கூறி அனைவரையும் பிரம்மிக்கச் செய்துள்ளார்.