முகத்தில் வர்ணப்பூச்சு பூசி உதைப்பந்தாட்டத்தை ரசித்த சவூதி அரேபிய பெண்கள்

சவுதி, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகச் சென்று பார்வையிட பெண்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் ஜித்தா மற்றும் ரியாதில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்வையிட கணிசமான தொகை பெண்கள் வருகை தந்திருந்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகத்தில் வர்ணப்பூச்சு மற்றும் ஆரவாரம் என சவுதி உதைபந்தாட்ட ரசிகைகள் தமக்குக் கிடைத்த வாய்ப்பில் தமது ஆனந்தத்தை வெளிப்படுத்தி கழகங்களுக்கு ஆதரவுக் கோசம் எழுப்பியதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 வருடங்களாக சவுதி அரேபியா பயணித்த பாதை தவறானது என தெரிவித்துள்ள முடிக்குடிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இனி வரும் காலங்களில் மிதவாத கொள்கையைக் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சவுதி அரேபிய அனுசரணையில் இலங்கையில் இயங்கி வரும் தஃவா அமைப்புகள் தம் நிலைப்பாடுகளை எவ்வாறு மாற்றிக் கொள்ளப் போகின்றன எனும் கேள்வியும் சமூக மட்டத்தில் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget