அமீரகத்தில் 1 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தவருக்கு 3 வருடம் சிறை! காரணம் இது தான்!

அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு நம்பர் பிளேட் எண்களுக்கான ஏலத்தில் ஒருவர் 31 மில்லியன் திர்ஹத்திற்கு 'ஒன்னாம் நம்பர்' பிளேட்டை ஏலம் எடுத்துவிட்டு அதற்கான செக் ஒன்றையும் சமர்த்தாக சமர்ப்பித்தார் 33 வயது எமராத்தி ஒருவர் எனினும் அவருடைய வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் போன வேகத்திலேலே திரும்பியது.

அப்பீல் கோர்ட்டிலும் ஏலம் எடுத்தவரின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 3 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவிக்கவுள்ளார். இதற்கிடையில், தண்டனை பெற்றவர் அந்த நம்பர் பிளேட்டை அதிக விலைக்கு வேறு ஒருவரிடம் விற்றுவிட்டு ஏலம் எடுத்த தொகையை கட்டிவிடுவதாக கூறினார். அடேய்... இந்த சிந்தனையுடன் எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க என எச்சரித்துள்ளது அபுதாபி போலீஸ்.

நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவர் முழுத்தொகையையும் கட்டிய பின்னால் அவரால் உபயோகப்படுத்தவோ அல்லது பிறரிடம் விற்கவோ இயலும் என ஏல ஷரத்துக்கள் தெளிவாக சொல்கின்றன.


Source: Khaleej Times / Msn
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget