சவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகரமாக மீண்டும் இணைப்பு!

சவுதி அரேபியாவில் நடைபெற்ற தொழில்சார்ந்த விபத்து ஒன்றில் ஆசிய நாட்டு தொழிலாளர் ஒருவரின் கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தின் அல்கோபர் நகரில் செயல்படும் மிக நவீனமான 'கிங் பஹத் யூனிவர்சிட்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் டாக்டர் சப்லான் அவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு அத்தொழிலாளியின் முற்றிலும் துண்டிக்கப்பட்ட கரத்தையும், வெட்டப்பட்ட நரம்பு மற்றும் இரத்த நாளங்களையும் மீண்டும் வெற்றிகரமாக இணைத்ததன் மூலம் அவருடைய இரத்த ஓட்டமும் சரிசெய்யப்பட்டுள்ளது. அத்தொழிலாளி மீண்டும் இயல்பாக தனது கையை இயக்கிடுவதற்காக மேலும் 2 அறுவை சிகிச்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன, அதன் பின்பே முன்புபோல் இயல்பாய் கையை இயக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget