வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை

நேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் பொ.ப.சே இயக்கம் இருக்கிறதெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் இனவன்முறை தோன்றாதிருப்பதற்கும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோகாதிருப்பதற்கும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேணுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.-அல்மசூறா நியூஸ்
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget