அசம்பாவிதங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும்  முன்னெடுத்துள்ள போதும்   இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளை சில தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். ஆகையினாலேயே இந்த 24 மணி நேர விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை  0711261261 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது helpdesk@dgi.gov.lk  எனும் மின்னஞ்சலுக்கோ  தெரியப்படுத்துமாறும் திணைக்களம் கேட்டுள்ளது. 
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget