முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு!

அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு

முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு!
சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் அறங்கேற்றப்படும் அசம்பாவிதங்கள் குறித்து உலகுகறிந்துள்ளது.

இவ்வாறான வன் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நம் நாட்டு முஸ்லிம்களை குறி வைத்து தாக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இனவாதிகள் சொற்பமானவர்களே உள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் சனத் தொகை அதை விடவும் அதிகமாக இருந்தும் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து மக்களை பாதுக்காக்க முடியாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருந்தால் அனைத்து அமைப்புக்களும் ஒன்று கூடி தான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். ஓர் அமைப்பு மாத்திரம் முடிவு செய்ய முடியாது. இது ஓர் அமைப்பின் பிரச்சினை அல்ல. மாறாக ஒரு சமூகத்தின் பிரச்சினை என்பதால் சமூகத் தலைமைகள் ஒன்று கூடித்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதுவே நடைமுறையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலகுவான வழி முறையாகும்.
இன்று சில முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி சில தீர்மானங்களை எடுத்து அறிவித்துள்ளனர். இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் எந்த அறிவிப்பும் வரா விட்டாலும் சமூக பிரச்சனைகளில் அனைவரும் ஒன்று கூடி தீர்மானிக்கும் நிலையை ஆரோக்கியமானது என்பதையும் அதற்கு எப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் தடையாக இருக்கப் போவதில்லை என்பதையும் இந்த இடத்தில் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து அறிவித்துக் கொள்கிறோம்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இனவாத பிரச்சினைகளை எப்படி சட்ட ரீதியாக அணுகுவது, எமது மக்களை எப்படி பாதுக்காப்பது என்பது குறித்து அனைத்து அமைப்புகளின் கூட்டறிக்கையை பரிசீலனை செய்து பார்க்கும் போது அதை விட சிறந்த, அழகிய வழிமுறைகளும் தீர்வுகளும் உள்ளன. அனைவரும் ஒன்று சேர்ந்து இன்னும் ஆலோசனை செய்தால் அதை விட அழகிய வழி முறைகளும் தீர்வுகளும் கிடைக்கலாம்.
எனவே எமது சமூக மக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுக்காப்பதற்கு நாம் அனைத்து முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசலாம் என்று முடிவு செய்து உள்ளோம்.

சமூகப் பிரச்சினை என்பதால் கொள்கை வேறுபாடு பார்க்க தேவை இல்லை. சமூகத்திற்காக ஒன்றினைவோம்.
அதில் அமைப்பின் பெயர்களை முன்னுரிமைப்படுத்த தேவை இல்லை. SLTJ தலைமையில் ஒன்று சேர்த்தேவையும் இல்லை. ‘’முஸ்லீம் அமைப்புக்கள்’’ என்று பொதுவான பெயரில் சரி ஒன்றினைவோம்.
இந்த சமூகம் இவ்வளவு நெருக்கடியாக இருக்கும் நேரத்திலாவது நாம் ஒன்றினையவில்லை என்றால் சமூக நலன் அற்றவராகவே நாம் கருதப்படுவோம்.

எதிர்காலத்தில் நாம் அனைவரும் தவறு செய்துவிட்டோம் என்று வரலாறு பேசும்.
அப்படி ஒரு இழி நிலையை சந்திக்காமல் கொள்கை பிரச்சினைகளையும் இயக்க பிரச்சினைகளையும் மறந்து ஒன்று சேரத் தயாரா?
நாளை மாலை 4.00 மணி அளவில் SLTJ தலைமையகத்தில் ஒன்று கூடுவோம்.
எங்கள் இடத்திற்கு வருவதற்கு விரும்பவில்லை என்றால் பொதுவான இடத்தில் சந்திக்க நாம் தயார்.
சமூகத்திற்காக கொள்கையைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் நாம் விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளோம்.
இப்படிக்கு
எம்.எச்.எம் ரஸான்
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
குறிப்பு: சந்திப்பிற்கு தயார் என்றால் நாளை காலை 11.00 மணிக்கு வருகையை உறுதிப்படுத்தவும்.
தொடர்புகளுக்கு: 0774781471 / 0774781473 / 077296 0926
Sltjmail@gmail


Sltj Facebook

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget